திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில்
பட்டப்பகலில் சந்தன மரத்தை வெட்டிய நபர் – கையும் களவுமாக பிடிபட்டார்.
திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி
வேலுப்பிள்ளை பூங்கா உள்ளது – மாநகராட்சி பராமரித்து வரும் இந்த பூங்காவில்
இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பலவகை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்ட பகலில் தனி ஒரு நபர் மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதாக செஷன்ஸ்
கோர்ட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது – தகவலின் அடிப்படையில் உடனடியாக
பூங்காவிற்கு சென்று பார்த்தபோது சந்தன மரத்தை ஒருவர் வெட்டி கொண்டிருப்பதை
பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் – மேலும் அவரை கையும் களவுமாக
பிடித்தனர்.

அவரை விசாரணை செய்ததில் தஞ்சை மாவட்டம் சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த நொண்டிக்
குமார் என்கிற அழகேசன் என்பது தெரியவந்தது – இதனையடுத்து செஷன்ஸ் கோர்ட்
போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சந்தன மரத்தை குறி வைத்து வெட்டக் கூடிய கும்பலை சேர்ந்தவரா – இவர் மீது ஏற்கனவே வேறு ஏதும் வழக்கு பதிவு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் திருச்சி மாநகராட்சியில் மிக முக்கிய இடமாக விளங்கக்கூடிய
நீதிமன்ற வளாகம் முன்பாக துணிகரமாக மரத்தை வெட்டிய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.







