நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனர்: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆதரவற்று தெருவோரம் வசித்து வரும் குழந்தைகளில் 1,430 குழந்தைகளை மாநில அரசு மீட்டுள்ளது. ஆதரவற்ற…

நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆதரவற்று தெருவோரம் வசித்து வரும் குழந்தைகளில் 1,430 குழந்தைகளை மாநில அரசு மீட்டுள்ளது.

ஆதரவற்ற தெருவோர வசிக்கும் குழந்தைகளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் தெருவோரம் ஆதரவற்று இருக்கும் குழந்தைகளின் மறுவாழ்வு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில், “தமிழ்நாட்டில் மொத்தம் 1,709 தெருவோர குழந்தைகள் கண்டறிப்பட்டனர். இதில் 1,069 குழந்தைகள் குடும்பத்தோடு தொருவோரத்தில் வசித்து வருகின்றனர். 516 குழந்தைகள் பகலில் தெருவோரத்தில் இருப்பதோடு இரவு நேரத்தில் தங்கள் குடும்பத்திடம் திரும்பி விடுகின்றனர்.

124 குழந்தைகள் எந்த ஆதரவும் இன்றி தெருவோரத்தில் வசித்து வருகின்றனர். தற்போது 1,430 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற தொருவோர குழந்தைகளில் 343 பேர் கல்வி பயில சேர்த்து விடப்பட்டுள்ளனர்.

மேலும் 1,454 குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 331 குழந்தைகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 803 குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலாளர்களாக அல்லது குழந்தை தொழிலாளர்களாக இருந்துள்ளனர்.

194 குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,463 குழந்தைகள் அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். 5 குழந்தைகள் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்துள்ளனர். அதேபோல இதுவரை 192 குழந்தைகள் கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் வசம் ஒப்படைக்கப்பட்டனர். 263 தெருவோர குழந்தைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள், சலுகை பெற்று வருகின்றனர்.

6 குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆதரவற்ற, தெருவோர குழந்தைகளின் நலுன்காகவும், பாதுகாப்புக்காகவும், மறுவாழ்வுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை துரிதமாக அமல்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” தமிழ்நாடு அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்த இன்றைய உத்தரவில்,

நாடு முழுவதும் 15 முதல் 20 லட்சம் தொருவோரம் வசிக்கும் குழந்தைகள் உள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது. இவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்வது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து இந்த விவகாரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை மாதம் ஒரு முறை கண்காணிக்க வேண்டும்.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 4 வாரம் ஒத்தி வைத்தனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில், தொருவோர குழந்தைகளின் மறுவாழ்வுக்காக மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், அமல்படுத்திய திட்டங்கள் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் ஒரு நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.