#Mobile மூலம் மனைவிக்கு முத்தலாக் – குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குவைத்திற்கு வேலைக்கு சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் மனைவிக்கு மெபைல் மூலம் முத்தலாக் கூறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ரஹ்மான். இவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்…

குவைத்திற்கு வேலைக்கு சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் மனைவிக்கு மெபைல் மூலம் முத்தலாக் கூறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ரஹ்மான். இவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில் ரஹ்மான் குவைத்துக்கு வேலைக்கு சென்றிருந்தார். ரஹ்மான் அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததாக தனது மனைவி ஃபரிதாவிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், மொபைல் மூலம் தனது மனைவி ஃபரிதாவை தொடர்புகொண்ட ரஹ்மான், முத்தலாக் கூறி அவரை விவாகரத்தும் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் மற்றும் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ததாகவும் ரஹ்மான் மீது ஹனுமன்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார் ஃபரிதா. பின்னர், ரஹ்மான் இந்தியாவுக்கு வருவதை அறிந்த போலீசார், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்து ரஹ்மானை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் ரஹ்மானிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், போலீசார் ரஹ்மான கைது செய்யதனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.