இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக #Morne Morkel நியமனம்!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை…

,Morne Morkel, bowling coach,Indian men's cricket team,

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதோடு தனது ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜூலை 9ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : “#Thangalaan படத்தை வெளியிட தடையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துமோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட உள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பயிற்சியாளர்களாக கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.