தனுஷின் ’D 55’ படத்தில் இணைந்த மம்மூட்டி…..!

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் “D 55” திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும், ’கர’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனுஷின் அடுத்த படமான ’D 55’ குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி ’D 55’ படத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.