சினிமாவுக்கு வந்து 50 வருடம்: வாழ்த்துகளால் திக்குமுக்காடிய மம்மூட்டி

சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர், நடிகைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6…

சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர், நடிகைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியான ’அனுபவங்கள் பாலிச்சாக்கல்’ என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான் தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ள அவர், ஆறு முறை மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். தமிழில், மெளனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, மக்களாட்சி, பேரன்பு உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் இப்போதும் அதே இளமையோடு நடித்து வரும் மம்மூட்டி, சினிமாவில் 50 வருடத்தை நிறைவு செய்தததை அடுத்து பிரபல ஹீரோகள் மோகன்லால், பிருத்விராஜ் உட்பட நடிகர், நடிகைகள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மோகன்லால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் சகோதரர் சினிமாவில் 50 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். அவருடன் 55 படங்களில் இணைந்து நடித்ததை பெருமையாக கருதுகிறேன். இன்னும் பல படங்களில் இணைந்து நடிப்பதை எதிர்நோக்குகிறேன். வாழ்த்துகள் இச்சக்கா!’ என்று கூறியுள்ளார்.

https://twitter.com/mammukka/status/1423699667938779141

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித் திருக்கிறார் மம்மூட்டி. ‘அனைவரிடம் இருந்து வந்த அன்பால் திக்குமுக்காடி போனேன். சக நடிகர்கள், ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி’என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.