முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

மே 5ம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் மமதா பானர்ஜி

மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகின்ற 5ம் தேதி பதவியேற்க உள்ளார்.

கேரளா, மேற்கு வங்கம், அசாம், தமிழகம் , புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், கேரளாவில் பினராயி விஜயன் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியமைக்கிறது. மேலும் மேற்வங்காளத்தில் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரிணமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது. இடதுசாரிகள் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றனர்.

இந்நிலையில் மக்களால் ஒருமனதாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட மமதா பானர்ஜி வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி பதவியேற்கிறார். மேலும் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், ஏப்ரல் 7ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு அரசு அனுமதி!

Karthick

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று!

Ezhilarasan

பிரதமர் மோடிக்கு பரிசளித்த துபாய் வாழ் இந்திய வம்சாவளி சிறுவன்!

Jayapriya