முக்கியச் செய்திகள் இந்தியா

பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மமதா போட்டி

பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மமதா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 213 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சியில் தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றார். எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியை விட ஆயிரத்து 956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேர்தலில் வெற்றி பெறாமல் முதல்வராக பதவியேற்றால் 6 மாதங்களுக்கு மட்டுமே அவரால்  தொடரமுடியும். அதற்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு முதல்வராக தேர்வாக வேண்டும் என்பது விதிமுறை. இதனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏதுவாக பபானிபூர் எம்எல்ஏ தனது பதவி விலகினார். இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு மேற்கு வங்கம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில்,  மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பபானிபூர், சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும், ஒடிசாவில் பிப்லி தொகுதிக்கும் செப்டம்பர் 30-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அக்டோபர் 3ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பபானிபூர் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

Janani

’5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன்’: சசிகலா அடுத்த ஆடியோ

Gayathri Venkatesan

“பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம்”

G SaravanaKumar