முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் கார்த்தி படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கர் மகள்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் இயக்குநர் சங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். 

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள படத்துக்கு விருமன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். முன்னதாக முத்தையா, கார்த்தி இருவரும் இணைந்து நடித்த கொம்பன் படம் ரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை கார்த்தி தான் பணிபுரிந்த இயக்குநருடன் மீண்டும் பணிபுரிந்ததில்லை. முதல்முறையாக இந்தமுறை முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

Jeba Arul Robinson

இணையத் தொடராக தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’

Halley karthi

கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

Gayathri Venkatesan