முக்கியச் செய்திகள் உலகம்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; எதிர்ப்புக்குழு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான சண்டையில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக பேச்சு வார்த்தைக்கு எதிர்ப்புக்குழு அழைப்பு அறிவித்துள்ளது. 

 

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு படைகளுக்கும் தலிபானுக்கும் போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்து வந்தன அமெரிக்க படைகள், ஆப்கனில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆப்கானை தலிபான்கள் எளிதாக கைப்பற்றினர். மேலும், அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை. அந்தப் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை எதிர்த்து பஞ்ச்ஷிர் போராளிகள், கடுமையாக போர் புரிந்து வருகின்றனர்.

இதனிடையே பஞ்ச்ஷிர் மாகணத்தின் தலைநகரை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள்  அறிவித்த நிலையில்,  இதை மறுத்துள்ள போராளிக் குழுக்கள், கசபா மற்றும் பஞ்ச்ஷீர் எல்லைப் பகுதிகளிலேயே தலிபான்கள் தடுக்கப்பட்டு விட்டனர் என்றும் இந்த சண்டையில் சுமார் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தனர். ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, தலிபான் எதிர்ப்பு படையினருக்கு சண்டையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

குஜராத் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள்

Saravana Kumar

‘மனித உரிமைகள்’ எனும் வார்த்தையை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

Halley karthi

இந்தியாவில் ஒரே நாளில் 15,906 பேருக்கு கொரோனா

Halley karthi