உலக அளவில் ட்ரெண்டிங்கில் ‘மாமன்னன்’ திரைப்படம்; நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் புதிய சாதனை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு முன் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்து வந்தது. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்றும் அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போராட்டங்கள் நடந்தன.

ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பாராட்டினர்.

அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில் படத்தை பார்த்து ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

மேலும் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழில் மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’ என்ற பெயரில் கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

https://twitter.com/mari_selvaraj/status/1685494249792655360?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685494249792655360%7Ctwgr%5E8625294a7d2ee7b4023f06ab58edee280f751a5c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fott-platform%2Fott-news%2F1072294-maamannan-number-one-trending-in-netflix.html

இப்படம் கடந்த ஜூலை 27-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வெளியானது முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்த படம் ஓடிடி தளங்களில் செய்துவரும் சம்பவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாமன்னன் நெட்பிளிக்ஸில் இதுவரை 12 லட்சம் பார்வைகளைக் கடந்து அசத்தியதுடன் இந்திய அளவில் முதலிடத்திலும் உலகளவில் 9-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.