1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை, செப்டம்பர் 24 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து, ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, செப்டம்பர் 24ல் துவக்குகிறது.
அதன்படி தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் பதியப்படவுள்ளது. இப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒரு லட்சம் பேர்கள் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில், அதுதொடர்பாக வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனுடன் நமது துணை ஆசிரியர் தேவா இக்னேசியஸ் சிரில் நேர்காணல் நடத்தினார்.
நேர்காணலில் வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது;
கருப்பட்டி இல்லாமல் உணவே இல்லை என்ற காலம் உண்டு. பனைமர விதைகளை தமிழ்நாட்டின் கடற்கரையோரம் நடவுள்ளோம். ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்திற்கு தன்னார்வலர்கள் பனை விதைகளை அளித்து வருகின்றனர்.
இந்த பனை விதைகள் நடும் பணியை செப்டம்பர் 24 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பனை மரங்களை வெட்ட தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்படும்போது தடுக்கப்படும். பனை மரம் ஏறுவதற்கான நவீன இயந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பனை மரத் தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








