சமுக வலைத்தளங்களின் காரணமாகத் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் மேல் உள்ள ஈர்ப்பு ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கிறது.
கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ”மாமனிதன்” இத்திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். “யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா ” இருவரும் இணைந்து இப்படத்திற்கும் இசையமைத்திருந்தனர். மேலும் இப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.
ஆனால் இத்திரைப்படம் வெறும் 40% பார்வையாளர்களால் மட்டுமே திரையரங்கில் பார்க்கப்பட்டது. தற்போது மாமனிதன் “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய “ஆஹா” தமிழ் சென்னை வணிக தலைவர் சிதம்பரம்,“ மாமனிதன் படம் எங்கள் ஆஹா ஓடிடி தலத்திற்கு ஒரு கௌரவம். அந்த படத்தை எடுத்ததற்கு நாங்கள் தற்போது பெருமைப் படுகிறோம். சில பல காரணங்களால் இப்படத்திற்கு வரவேர்ப்பு கிடைக்கவில்லை. சமுக வலைத்தளங்களின் காரணமாகத் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் மேல் உள்ள ஈர்ப்பு ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கிறது. நான் இந்த நேரத்தில் சீனு ராமசாமி அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அவர் இப்படத்தின் விளம்பரத்திற்காக தொடர்ந்து நிரைய இடங்களுக்குச் சென்றது எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் புது படங்களை கொடுப்பதே எங்கள் நோக்கமாகும். சீனு ராமசாமி எங்குச் சென்றாலும் எங்கள் தளத்தைப் பெருமைப்படுத்திப் பேசினார் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். “மாமனிதன்” படத்தை நாங்கள் தெலுங்கிலும் வெளியிட்டுள்ளோம். உங்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. ஆஹா நிறுவனமும் அனைவரையும் ஆதரிக்கத் தயாராக உள்ளது. எனவும் பேசினார்.







