சென்னை பெருநகரில் “காவல் கரங்கள்” திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, சுதந்திர தினவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நல் ஆளுமை” விருது வழங்கினார்.
காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 2,658 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,111 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 269 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 258 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 108 ஆம்பூலன்ஸ் மூலம் 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘ஜாதி – மதம் இல்லை எனச் சான்றிதழ்; இரண்டு வாரங்களில் வழங்க உத்தரவு!’
மேலும், உரிமை கோரப்படாத 1186 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது. காவல் கரங்கள் உதவி மையத்தின் அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட அவர்களின் பணி மேலும், பலரைச் சென்றடையவும், மீட்கப்பட்ட நபர்களுக்கு உதவிசெய்யவும். காவல் கரங்கள் உதவி மையம் தொடர்ந்து பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனை அங்கீகரிக்கும் விதமாக சென்னை பெருநகரில் “காவல் கரங்கள்” திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, சுதந்திர தினவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நல் ஆளுமை” விருது வழங்கினார்.








