கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக மாமல்லபுரம் கடற்கரையை
தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
இணைந்து 100-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக
மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதில் அரசு
மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு
ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் நெகிழிகளிடமிருந்து கடல் வாழ் உயிரினங்களை
காப்போம் என பிளாஸ்டிக் நெகிழி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

அதனைத் தொடர்ந்து கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை
சேகரித்து அவற்றை தரம் பிரித்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம்
ஒப்படைத்தனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் அதனை மறு சுழற்சிக்காக எடுத்துச் சென்றனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.