கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழாவை ஒட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா கடந்த 21ஆம்
தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாவின்போதும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதி உலா, கலை நிகழ்ச்சிகள், போன்றவை நடைபெற்றன.
9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கன்னியாகுமரி
மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறவிருக்கிறது. இதில் சுவாமியும் அம்பாளும் பெருமாலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
—-ரெ.வீரம்மாதேவி
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழாவை ஒட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான…






