முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரஸ் தலைவராக இன்று பதவியேற்கிறார் மல்லிகார்ஜூன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து, முழுநேர தலைவரை தேர்வு செய்தால் கட்சி பலப்படும் என்ற கருத்தும் வலுப்பெற்றதால், கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் எம்.பி.யும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்வு பெற்று வரலாறு படைத்தார். மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26-ந் தேதி பதவி ஏற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைக்கிறார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைப்பார்கள்.

பல மாநிலங்களில் காங்கிரசை வெளியேற்றி பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள நிலையில் கார்கே காங்கிரசுக்கு தலைமை ஏற்கிறார். அவர் பா.ஜ.க.வின் சவாலை எப்படி எதிர்கொள்வார் என்பதை சோதித்து பார்ப்பது போல நவம்பர் 12ம் தேதி இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் விரைவிலேயே குஜராத் சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே தனது அரசியல் சாதுரியத்தால், பா.ஜ.க.வின் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வெல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கு நீட்டிப்பு: தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வு!

Gayathri Venkatesan

பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு

G SaravanaKumar

முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!

G SaravanaKumar