மலேசிய ஓபன் பேட்மிட்டன் | 2வது சுற்றில் இந்திய வீரர் பிரணாய் அதிர்ச்சித் தோல்வி!

கோலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பேட்மிட்டன் 2வது சுற்றில் இந்திய வீரர் பிரணாய் தோல்வியடைந்து வெளியேறினார். மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டி கோலாம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையைர் பிரிவில் இன்று…

கோலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பேட்மிட்டன் 2வது சுற்றில் இந்திய வீரர் பிரணாய் தோல்வியடைந்து வெளியேறினார்.

மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டி கோலாம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையைர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் – சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் முதல் செட்டில் லி ஷிஃபெங் எளிதாக வென்றார்.

பின்னர் 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.  வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரப்பரப்பாக நடைபெற்றது. வீரர்கள் இருவரும் தீவிரமாக ஆடி பாயிண்ட்ஸ்களை குவித்தனர். இறுதியில்  23-21 என்ற கணக்கில் லி ஷிஃபெங் வெற்றி பெற்றார்.

இதனால் லி ஷிஃப்பெங் 21-6, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரணாய்-வை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதில், சீன வீரர் முதல் சுற்றில் இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவதை தோற்கடித்தார் என்பது குற்ப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.