முக்கியச் செய்திகள் தமிழகம்

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்: கமல்ஹாசன்

 உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலை தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகத்தை சீரமைப்போம் என்ற முழக்கத்துடன்  எதிர்கொண்டார். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அடுத்த சில நாட்களில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அடுத்தடுத்து பொன்ராஜ், குமரவேல், நந்தகுமார், சந்தோஷ்பாபு, பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் சர்வாதிகாரம்தான் இருப்பதாகவும், ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டும் சிலரால்  முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கூட்டணி வைப்பதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டது, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியவர்கள் தற்கால தாக சாந்திக்காக குடிக்க வந்தவர்கள், நாடோடிகள், யாத்ரீகர்கள் ஓரிடம் தங்க மாட்டார்கள், வியாபாரம் உள்ளவரை நாடோடிகள் ஓரிடத்தில் தங்குவர் என்று கடுமையாக சாடிய கமல்ஹாசன், தன் தவறை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியை தனிநபர்கள் தங்கள் விளையாட்டுக்கேற்ப மாற்றி ஆடியது இனி நிகழாது என்றும் விளக்கினார். 

மேலும், வீடியோவைப் பகிர்ந்த கமல்ஹாசன், “என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஆண்டுக்கு ஒரு முறை கதர் ஆடை: ப.சிதம்பரம் கோரிக்கை

Halley karthi

“எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்த

Jayapriya

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி

Vandhana