முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்ட கேரள எம்.எல்.ஏ!


கேரளாவில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த 20ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. கேரள மாநில முதலமைச்சராக இரண்டாவது பினராயி விஜயன் பதவியேற்றுகொண்டார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.

இதையடுத்து சட்டசபையை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஏ.ராஜா தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

“கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம்

“தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Halley karthi

தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்

Jeba Arul Robinson