மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் ஆம் ஆத்மி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. வரும் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக களமிறங்கவுள்ள நிலையில், அக்கட்சியின் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம்- ஆம் ஆத்மி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற உள்ள, மக்கள் நீதி மய்யத்தின் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில், கூட்டணி அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவார் என கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.