மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகும் சீரம் நிறுவனம்!

கோவிஷீல்டை தொடர்ந்து மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த சீரம் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள், தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது…

கோவிஷீல்டை தொடர்ந்து மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த சீரம் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள், தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து, விநியோகித்து வருகிறது. இந்நிலையில், மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த சீரம் நிறுவனம் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நோவாவாக்ஸ் (NOVAVAX) என்ற நிறுவனம் கண்டுபிடித்த கோவாவாக்ஸ் (COVOVAX) தடுப்பூசியை பரிசோதனை செய்ய அனுமதிக்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தடுப்பூசி ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply