உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் என்கிறது திருக்குறள். இதன் பொருள் உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நம்பியே உலகச் சமூகம் இயங்கி வருகிறது என்பதுதான். தமிழ்நாட்டின் உயிர்நாடியாக வேளாண்மையே திகழ்கிறது. டெல்டாவுக்கு நெல் என்றால், ஈரோட்டுக்கு மஞ்சள், சேலத்திற்கு மாம்பழம், அரியலூருக்கு முந்திரி, பண்ருட்டிக்கு பலாப்பழம், நெல்லைக்கு பனை என ஒவ்வொரு ஊரும் ஒவ்வொன்றுக்கு புகழ் பெற்றது. அதே சமயம் தண்ணீர் பிரச்னை, புயல், வெள்ளம், போதிய மகசூல் இன்மை என ஏராளமான பாதிப்புகளுக்கு உழுகுடிகள் உள்ளாகிறார்கள்.
இந்த நிலையில்தான் மண் வளம் பெற்றால் மனிதர்களும் வளம் பெறலாம் என்ற ஒற்றை சிந்தனையோடு எங்களுடைய அடுத்த குழந்தையை உங்களிடம் தவழ விட்டுள்ளோம். தன் காலமெல்லாம் கால்கடுக்க நடந்து நடந்து இயற்கை வேளாண்மைக்காக தன் வாழ்வை அர்பணித்த இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் பிறந்த நாளில் நியூஸ் 7 தமிழ் அக்ரி யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூஸ் 7 தமிழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன், ஆச்சி மசாலா நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக், இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, யூ டியூப் சேனலை தொடங்கிவைத்தனர். விழாவில் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மண் வளத்தை, மகசூலை பெருக்குவது எப்படி, எந்த மண்ணில் எந்த பயிர் அதிகம் விளையும், முன்னோடி விவசாயிகளின் வெற்றிக் கதைகள், பேட்டிகள், விவசாயிகள் தோல்விகளில் இருந்து பாடம் கற்க, விவசாயிகளின் தோல்விகளின் வலிகளும் நமது அக்ரி யூட்யூப் சேனலில் பதிவு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளன. என்னென்ன மானியங்களையும் வழங்குகின்றன என அனைத்தையும் விவசாயிகளிடம் யூட்யூப் சேனல் வாயிலாக கொண்டு சேர்க்கிறோம். விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையேயான பாலமாக யூட்யூப் சேனல் செயல்படும்.
நியூஸ் 7 ப்ரைம், நியூஸ் 7 பக்தியை தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் அக்ரி யூடியூப் சேனலுக்கும் உங்களுடைய மேலான ஆதரவை வழங்குங்கள்.
சப்ஸ்கிரைப் செய்ய: https://bit.ly/3Jcj08c