இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் பயன்பாடு கடந்த 23 ஆண்டில் முதல் முறையாக 9.1%குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் திட்ட மற்றும் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் திட்ட மற்றும் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 214.12 மில்லியன் டன்கள் பெட்ரோலிய எரிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2020- 2021ம் நடப்பு நிதியாண்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் பயன்பாடு 194.63 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது.
இதன்காரணமாக நாட்டில் கடந்த 1998-1999 ஆண்டிலிருந்து தற்போதுதான் முதன் முறையாக பெட்ரோல் எரிபொருட்களின் பயன்பாடு 9.1% குறைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோலைவிட டீசல் பயன்படுத்துவதே அதிகம். டீசலின் பயன்பாடு 12% (72.72 மில்லியன் டன்),பெட்ரோல் பயன்பாடு 6.7% (27.95 டன்)
ஊரடங்கின் காரணமாக வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் டீசல் பயன்பாடு அளவு குறைந்த காரணத்தால் மொத்த எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளதற்கு காரணமாகும்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7-8 % மட்டுமே உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மற்றும் பெட்ரோல், டீசல் பயன்பாடு மீண்டும் குறையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.







