சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்; பொறியாளர்களுக்கு உத்தரவு

சாலைகளில் பொதுமக்கள் இடையூறு இன்றி பயணிப்பதற்கு ஏதுவாக, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக, 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.` சென்னையில் 942…

சாலைகளில் பொதுமக்கள் இடையூறு இன்றி பயணிப்பதற்கு ஏதுவாக, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
இதற்காக, 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.`

சென்னையில் 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் சரியான ஆழத்திற்கு தோண்டி எடுத்து, ஜல்லி கலவை, சிமெண்ட் காங்கிரீட் கலவை, அல்லது குளிர்ந்த தார் கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 மெட்ரிக் டன் குளிர்ந்த தார் கலவை கையிருப்பில் உள்ளதாகவும், 250 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லி கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவை தேவையான அளவிற்கு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதாகவும், சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் பொழுது, பள்ளம் மற்றும் குழி உள்ள இடங்களை தேவையான அளவு ஆழத்திற்கு தோண்டி எடுத்து ஜல்லி கலவை (Wet mixed Macadam) சிமெண்ட் கான்கிரீட் கலவை அல்லது குளிர்ந்த தார் கலவை (Cold Mix) கொண்டு சரியான முறையில் நிரப்பப்பட வேண்டும் என அறிவுறுத்ப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 மெட்ரிக் டன் குளிர்ந்த தார் களைவ கையிருப்பில் உள்ளதாகவும், 250 மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லி கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவை தேவையான அளவிற்கு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

மாநகராட்சியின் அனைத்து மண்டனங்களிலும் துணை ஆணையாளர்கள், வட்டார் துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட மண்டலங்களின் மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுது பார்க்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால்கள் குறித்த புகார்களை 1913 என்ற உதவி எண்ணிற்கும், 044-2561 9206, 044 2561 9207 மற்றும் 044 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.