பராமரிப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலம் மீண்டும் திறப்பு!

பராமரிப்பு பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம் பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாநகரின் மிக முக்கிய அடையாளமாகவும்,மாநகரின் போக்குவரத்திற்கு மிகவும் அவசியமாகவும் உள்ள…

பராமரிப்பு பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம் பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி மாநகரின் மிக முக்கிய அடையாளமாகவும்,மாநகரின் போக்குவரத்திற்கு மிகவும் அவசியமாகவும் உள்ள காவேரி பாலம் கடந்த 1976ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் மிக முக்கிய பாலமாக விளங்கும் இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மை குறைந்ததால் பலமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையும் படிக்கவும் : துபாய் ATP டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஆண்ட்ரே ரூப்லெவ்

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக ரூ.6.87 கோடி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே நகருக்குள் நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் முழுமையாக பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்தார். டோல்கேட் மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் நாள்தோறும் ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றிச் சென்ற திருச்சி வாழ் மக்களுக்கு காவிரி பாலம் திறக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.