துபாய் ATP டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த போட்டி தற்போது இறுதியை எட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துபாய் ATP டென்னிஸ் போட்டியில் நேற்று அரையிறுதி சுற்று நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் உடன் மோதிய ரூப்லெவ் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதையடுத்து 2-0 என்ற நேர் செட்கணக்கில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல் இன்னொரு பிரிவில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் ரஷ்ய வீரரான மெட்வெடேவ்வை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என்ற புள்ளிகளில் கைப்பற்றி 2-0 என்ற நேர் செட் கணக்கில் மெட்வெடேவ் வெற்றி பெற்றார். ஜோகோவிச்சின் இந்த அதிர்ச்சி தோல்வி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.