பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்திய கார் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய மாடல் கார்களை வெளியிட்டு, ஹூண்டாய், டொயோட்டா, மாருதி சுசுகி, கியா போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக கார் விற்பனையில் கடும் போட்டிபோட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மஹிந்திரா கார் நிறுவனத்தின் பல்வேறு வகையான கார்கள் விற்பனையில் தொடந்து முன்னிலையில் இருந்தாலும் மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற கார் என்றால் அது ஸ்கார்பியோ தான். இந்திய கார் சந்தைகளில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான இந்த கார் “Car of the Year”, “Best SUV of the Year”, “Best Car of the Year” போன்ற விருதுகளைப் பெற்றது. இதுவரை இந்தக் காரானது 4 அப்டேட்டுகளில் வந்திருக்கின்றன.
இதுவரை வடிவமைப்பை மாற்றாமல் சிறு சிறு மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்த நிலையில், தற்சமயம் முற்றிலும் வித்தியாசமான வடிவிலான ஸ்கார்ப்பியோவை வெளியிட்டுள்ளது மகேந்திரா நிறுவனம்.
மல்டி ஸ்போக் அல்லாய் வீல், 6 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ்ட் கிரில் மற்றும் எக்ஸ்யூவி 700ல் இருக்கும் மஹிந்திராவின் புதிய லோகோ ஆகியவற்றை இந்தக் கார் கொண்டிருக்கும்.
ஆறு இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகளுடன் கிடைக்கும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், சோனி மியூசிக் சிஸ்டம், காற்றோட்டமான முன் வரிசை இருக்கைகள், சேமிப்பகத்துடன் கூடிய முன் ஆர்ம்ரெஸ்ட், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பலவற்றை உள்ளடக்கி உள்ளது மஹிந்திரா ஸ்கார்பியோ-என்.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. Scorpio-N இன் பெட்ரோல் பதிப்பு 2.0 லிட்டர் mStallion 150 TGDi என்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இதன் விலையைப் பொறுத்தவரை 6 சீட்டர்களைக் கொண்ட இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 13.65 லட்சம் ரூபாய் முதல் 19 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.