முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

மொபைல் ஆட்டோ வீடு: சென்னை ஆர்கிடெக்கை பாராட்டிய மஹிந்திரா நிறுவன தலைவர்!

லோடு ஆட்டோ மூலம் சிறிய வீட்டை கட்டி அசத்திய சென்னையைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அருண் பிரபு என்பவரை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

சென்னைச் சேர்ந்தக் கட்டட வடிவமைப்பாளர் அருண் பிரபு என்பவர், லோடு ஆட்டோவை மறுவடிவமைத்து வீட்டை ஒன்று கட்டி அதற்கு ‘solo 0.1’ என பெயரிட்டுள்ளார். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டட வடிவமைப்பு மற்றும் தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து அதனை வடிவமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எடைக் குறைவான கட்டுமான பொருட்களை கொண்டு மிகவும் இலகுவாக கட்டப்பட்டுள்ள இந்த மொபல் வீடு ஆறுக்கு ஆறடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் சோலார் மின் சக்தி மூலம் ஃபேன், மூன்று லைட்கள், லேட்டாப் மற்றும் மொபைல் போன் சார்ஜ் செய்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீட்டை வடிவமைத்ததிற்கான நோக்கம் ஏழை எளிய மக்கள் கூட இதுபோன்ற வீடுகள் மூலம் பயன்பெறுவதுதான் என அருண் பிரபு தெரிவித்தார்.

ஆனந்த் மஹிந்திரா

இந்த ஆட்டோ வீட்டின் வடிவமைப்பின் புகைப்படத்தை, வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டரில் பதிவிட்டு, அருண் பிரபுவின் புதிய முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அந்த ஆட்டோவில் மிகவும் குறைந்த இடத்தில் வீட்டை வடிவமைத்தது போல், மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ கார் மாடலுக்கு அத்தகைய வடிவமைப்பை அருண் செய்து தர முடியுமா எனக் கேள்வியை முன்வைத்தார்.

மேலும் அருண் பிரபுவை தொடர்புக்கொள்ள, அதுகுறித்த தகவல்கள் இருந்தால் பதிவிடவும் எனத் தெரிவித்திருந்தார். இவரது இந்த ஒரு ட்வீட்டுக்கு ஐந்தாயிரம் லைக்குகள் நூற்றுக்கணக்கான கமெண்டுகளும் குவிந்தன. அதில் ஒருவர் பிரபுவின் கைப்பேசி எண்ணையும் பகிர்ந்திருந்தார். தனது இந்த புது கண்டுபிடிப்புக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டி ட்வீட் செய்தது குறித்து அறிந்த அருண் பிரபு இன்பதிர்ச்சியில் மூழ்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை தெருக்களின் பெயர்களில் இருந்து சாதி நீக்கம்

EZHILARASAN D

கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் விபத்தில் படுகாயம்!

EZHILARASAN D

பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை கொலை செய்த மகள்!

Jeba Arul Robinson