மகாத்மா காந்தி பிறந்தநாள் – மாணிக்கம் தாகூர் புகழாரம்!

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவுகூர்வோம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சத்தியம், அகிம்சை, சமத்துவம், சகோதரத்துவம் —
அவர் காட்டிய பாதை இன்றும் நம் ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழ்கிறது.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்;
ஒற்றுமையுடன் சமத்துவ இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.

மகாத்மா காந்தியின் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி,
அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பயணிப்போம்.

தேசத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவுகூர்வோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.