கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த பெருந்தலைவரும், அரசியல் அதிகாரத்தைத் தனக்காகப் பயன்படுத்தாமல், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் அர்ப்பணித்தவருமான கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
எளிய குடும்பத்தில் பிறந்து, விடுதலைப் போராட்ட வீரராக வாழ்க்கையைத் தொடங்கி, தன்னலமற்ற உழைப்பாலும், தியாகத்தாலும் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய உன்னதத் தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




