மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது நூறு மடங்கு வணக்கங்கள். மதிப்பிற்குரிய பாபு எப்போதும் சுதேசிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்தார். இது வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகும். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களை கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.







