மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவி விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசு – ஆளுநர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதலமைச்சர் பதவியை உத்தவ் தக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், மாகராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார். பதவி விலகல் முடிவை ஆளுநர் கோஷ்யாரி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். ஆளுநர் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்வார் அல்லது ஆளுநர் பதவியில் இருந்து அவரை மத்திய அரசு விரைவில் விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.