#Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!

மகாராஷ்டிராவில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது.…

#Maharashtra | Assembly Elections: Plans to hold Assembly Elections after Diwali - #ECI Info!

மகாராஷ்டிராவில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, அதற்குள்ளாக மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, “பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், எம்என்எஸ், சமாஜ்வாதி, சிவசேனை உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்தோம். மாவட்ட நீதிபதி, காவல் ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர் முதலான அதிகாரிகளையும் சந்தித்தோம். தசரா, தீபாவளி முதலான பண்டிகை காலத்தை நினைவில் கொண்டு, தேர்தல் தேதியை பரிசீலிக்குமாறு அரசியல் கட்சிகள் எங்களிடம் கேட்டுக்கொண்டன.

மேலும், நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களின் தேர்தல் குறித்த அக்கறையின்மையையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெற்கு மும்பையில் உள்ள கோலாபா, புனே கன்டோன்மென்ட், மும்பாதேவி, குர்லா, கல்யாண் முதலான பகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகக்குறைந்த அளவிலேயே வாக்களித்தனர்.

அதுமட்டுமின்றி, வாக்குப்பதிவை அதிகரிக்க தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு வாக்களிக்கும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.