வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு புகார் தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் சாமுவேல்ஸ். இவர் 71 டெஸ்ட் மற்றும் 207 ஒரு நாள் போடி, 67 டி-20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2012, 2016-ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் சாமுவேல்ஸ்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்று விளையாடிய போது சர்ச்சையில் சிக்கினார். அது தொடர்பாக விசாரித்த சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 4 பிரிவுகளில் குற்றச்சாட்டை தற்போது பதிவு செய்துள்ளது.
அந்தப் போட்டியின்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருள், பணம் அல்லது தான் பெற்ற இதர சலுகைகள் பற்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்க வில்லை. இதையடுத்து 14 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்க அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.







