திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது விண்ணைப் பிளக்கும் அரோகரா…

Maha Deepam lit in Tiruvannamalai - Devotees have darshan!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது விண்ணைப் பிளக்கும் அரோகரா முழக்கங்களுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி ஆயிரக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விழாவுக்காக, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை, நேற்று (டிச. 12) மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மகா தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்: மகா தீபக் கொப்பரைக்கு நேற்று அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதன்பிறகு, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியே மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் மலை மீது மகா தீபக் கொப்பரை கொண்டு சென்று வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.