மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த செப்.9-ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து திமுக மற்றும் தவெக கூட்டணிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் சுகன்யா ஆக்யோர் போட்டியிடுகின்றனர். அதேபோல தவெக கூட்டணி சார்பில் ஏற்கனவே அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த சிபிஐ மற்றும் சிபிஐஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள் தமித்து போட்டியிடுவதாக் அறிவித்துள்ளன. அதன்படி மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் சிபிஐ கட்சியும் போட்டியிட உள்ளது. இடதுசாரி அணியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்தவகையில் திமுக வேட்பாளர் பரந்தாமன் மற்றும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் இன்று மதுராந்தகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் திமுக வேட்பாளர் சுகன்யா மற்றும் தவெக வேட்பாளர் சத்தியபாமா ஆகியோர் தாராபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.