மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட #TVK கொடி – 1000 பேருக்கு சமபந்தி விருந்து!

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவை முன்னிட்டு மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில்…

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவை முன்னிட்டு மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் ஆகஸ்ட் 22-ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது.

இந்நிலையில், மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள ஓடைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மதுரை ஓடைப்பட்டி பகுதியில் 50 அடி உயர கொடியை அக்கட்சியின் மதுரை மாவட்ட (வடக்கு) தலைவர் விஜய் அன்பன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இதையும் படியுங்கள் : “வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” – #VijaySethupathi

பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.35000 கல்வி உதவித்தொகையும், 5 பேருக்கு குலுக்கள் முறையில் ஆட்டு குட்டிகளும் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு இஸ்திரி பெட்டியுடன் கூடிய வண்டி, மற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கப்பட்டது. கொடி அறிமுக விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.