“வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” – #VijaySethupathi

வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி என நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்டுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக ‘வாழை’ என்ற படத்தைத்…

வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி என நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக ‘வாழை’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் நேற்று முன்தினம் (ஆக. 23) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி ‘வாழை’ திரைப்படத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : #specialarrearexam : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

அந்த வீடியோவில் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாவது,

“வாழை அற்புதமான திரைப்படம். படம் முடிந்தது போல் தெரியவில்லை. இன்னும் அதற்குள்ளேயே இருக்கிறேன். இப்படி ஒரு படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி வாழ்க்கையைத் தெரிந்துகொள்வது நம் வாழ்க்கையில் பல கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். இந்த அற்புதமான படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.