மதுரை-திண்டுக்கல் இடையே பணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது இரவு 7:45க்கு திண்டுக்கல் சென்றடையும்.
அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என்று தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயில்கள் அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல் நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதனால், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளும் இந்த ரயிலைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் விரைவில் இரு நகரங்களுக்கும் சென்று சேர முடியும்.








