முக்கியச் செய்திகள் விளையாட்டு

சர்வதேச பேட்மின்டன் போட்டி-6 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை வீராங்கனை

சர்வதேச பேட்மின்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி வீராங்கனை
ஜெர்லின் அனிகா 6 தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்தில்  இம்மாதம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 6 வது ஆசிய பசிபிக்
காது கேளாதோர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்போட்டியில் இந்தியா சார்பில் சர்வதேச பேட்மிட்டன் வீராங்கனை ஜெர்லின்
அனிகா பங்கேற்றார். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் பஙங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகாவுக்கு ஜூனியர் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களும், ஒபன்
பிரிவில் 3 தங்கப் பதக்கங்களும் என மொத்தமாக 6 தங்கப் பதக்கங்கள்
கிடைத்துள்ளது.

ஜெர்லின் அனிகா ஜூன் மாதம் பிரேசிலில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஜெர்லின் அனிகா நாளை மாலை 3 மணிக்கு விமானம் வழியாக மதுரை வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏடிஎம் கொள்ளை: பண இருப்பை கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்

Vandhana

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் புகார்!

EZHILARASAN D

“மாற்றத்திற்கான மாணவிகள்” வாட்ஸ் அப் குழு தொடக்கம்; எம்.பி பெருமிதம்

Web Editor