மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்; நேரக்குறைப்பு இல்லை – அரசு அதிகாரிகள் தகவல்

பொங்கலையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

பொங்கலையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்படும் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், இந்த முறை நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.