ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது எனவும்,
முன்பதிவு அடிப்படையில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான
முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டார்.
அவருடன், ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்
ஜீத் சிங், காவல்துறையினர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலோசனை குழு முன்னிலையில் நடைபெறுகிறது. மூன்று ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் எந்த ஊரிலும் பாகுபாடு இல்லாமல் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
ஆன்லைன் முன்பதிவு விண்ணப்பங்களில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய
காளைகளின் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த காளைகளுக்கு இந்தாண்டு
முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பரிசு வழங்குவதில் எந்த ஒரு குளறுபடியும்
இருந்ததில்லை, இனி வருங்காலங்களிலும் இருக்காது.
தமிழக ஆளுநர் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தால் அவருக்கு தேவையான முழு
பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வழங்கும்” என்றார்