“தமிழகத்தில் மிகச்சிறந்த கலாச்சார நகரம் மதுரை” – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

மதுரை விமான நிலையத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பு புதிய நிலைகளும் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வான்கருவி பாதுகாப்பு அலுவலகம் (New ATC ) அமைக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று திறந்து வைத்தார். உடன் மத்திய இணை அமைச்சர் ட.முருகன் மற்றும் முரளிதரன் மோகன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் V.V.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய விமான துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “மதுரை, தமிழகத்தில் மிகச்சிறந்த கலாச்சார நகரமாகும். NDA கூட்டணியில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களில் மதுரைக்கு அனைத்தும் தேவையானதை செய்ய இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனி அன்பும் பற்றும் வைத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஆறு லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களின் கோரிக்கையை ஏற்று விருப்பத்தையும் ஏற்று மதுரை விமான நிலைய சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. சென்னை மற்றும் மதுரை விமான நிலையத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பு புதிய நிலைகளும் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி விமான நிலையம் ஓடுபாதை மிகச் சிறியது என்றாலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படும்.

கோயம்புத்தூர் மிகப்பெரிய நகரம், அதே போன்று தொழில் அதிக வளர்ச்சியடைந்த நகரம். மேலும் அனைத்து சமுதாய மக்களும் இருக்க கூடிய நகரம் மிக பிரம்மாண்டமான கட்டுமான பணிகள் அமைக்கவும், கோயம்புத்தூர் விமான நிலையம் தயார் செய்யபடும். தனிப்பட்ட கருத்துக்கள் பாரதப் பிரதமர் தமிழ்நாட்டுக்கு தனி கவனம் செலுத்துகிறார். சிறிய திட்டங்களாக இருந்தாலும் சரி, பெரிய திட்டங்களாக இருந்தாலும் சரி, பாரத பிரதமர் கவனம் செலுத்தி வருகின்றனர். மதுரைக்கு மிகச் சிறப்பு வாய்ந்த மல்லிகை பூ, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கும் மதுரை மல்லிகைப்பூ போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெருமையை உலகம் முழுவதும் சொல்வதற்கும் பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.