மதுரையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் பெருமாள் கோவில் அருகே வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால்,சாலை ஓரத்தில் மோதி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், இளைஞர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். இது குறித்த, பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.







