மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில் சோதனை!

மதுரை-போடி இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் போடி வரை நிறைவடைந்தது. மேலும்  மதுரை-தேனி…

மதுரை-போடி இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் போடி வரை நிறைவடைந்தது. மேலும்  மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.  வாரம் 3 முறை இயக்கப்படும் சென்னையிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையும் இன்று முதல் தொடங்குகிறது. ரயில் போக்குவரத்து முன்னிட்டு மதுரை-போடி இடையே விரைவு ரெயில் சோதனை நேற்று  நடந்தது.  இந்த சோதனை 110 கிலோமீட்டர் வேகத்தில் நடத்தப்பட்டது.  மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு 2 பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டது.  பின்னர் 12 மணிக்கு அதே வேகத்தில் போடியிலிருந்து மதுரைக்கு சென்றது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.