பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு நிலைய அதிகாரி!

காட்டுமன்னார்கோவில் பகுதி பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பணியின் போது மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வாழக்கொல்லை பகுதியை…

காட்டுமன்னார்கோவில் பகுதி பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பணியின் போது மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வாழக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (51). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவர் சமூக சேவை, கவிதை எழுதுவதில் பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுகளை
பெற்றவர். அப்பகுதி மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்ற இவர் காலை வீட்டில் இருந்து காட்டு மன்னார்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்க்கு பணிக்கு வந்துள்ளார்.

பின்னர் வழக்கம் போல் அலுவலகத்தில் தனது பணிகளை மேற்கொண்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட சக தீயணைப்பு வீரர்கள் அவருக்கு முதலுதவி அளித்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
மருத்துவமனைக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.