சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோரமண்டல
ஆர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில், ‘எல்லோரோ ஃபைன் அகாடமி’ சார்பில்
ஓவிய கண்காட்சி நடைப்பெற்று வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோரமண்டல
ஆர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில், ‘எல்லோரோ ஃபைன் அகாடமி’ சார்பில்
ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. 16-ஆம் வருடம் நடைபெறும் ஓவிய
கண்காட்சி ஜுன் 6 தேதி துவங்கப்பட்டது. இந்த கண்காட்சி வரும் 18-ஆம் தேதி
வரை நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு
பார்வையிட்டு வருகின்றனர்.
ஓவியர் நித்யானந்தம் தலைமையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், ஐடி
ஊழியர்கள் என 10 இளம் ஓவியர்கள் இனைந்து வரைந்த, 100க்கு மேற்பட்ட
ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஓவிய கண்காட்சியில் ஆயில்
பெயிண்டிங், வாட்டர் பெயிண்டிங், கிரையான்ஸ் பெயிண்டிங் மற்றும் பென்சில்
பெயிண்டிங் உள்ளிட்ட, அனைத்து வகையாக பெயிண்டிங் வகைகளும்
பார்வையாளர்களை கவரும் வகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
கு. பாலமுருகன்







