முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

விடுதி பெண்கள் குளிப்பதை மருத்துவர் நண்பருக்கு செல்போனில் பகிர்ந்த பெண் கைது

மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் மருத்துவர் நண்பருக்கு அனுப்பிய விவகாரத்தில் இரண்டு பேரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் எம்பிபிஎஸ்
படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ஆசிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கியுள்ள விடுதி பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஆசிக்கிற்கு அனுப்பிவந்துள்ளார். மேலும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து தெரியவந்ததும் பெண் ஒருவர் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் காளீஸ்வரியின் செல்பேனை பார்த்தபோது இந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. இதையடுத்து, விடுதியின் மேலாளர் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

 

அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் செல்போனில் பெண்கள் குளியல் காட்சிகள் மற்றும் உடைமாற்றும் காட்சிகள் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிக் மற்றும் காளீஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பிய சக மாணவியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?

Halley Karthik

“வளர்ச்சிக்கு காலனிய மனநிலையை உடைத்தெறிய வேண்டும்” பிரதமர் மோடி

Halley Karthik

ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பு இன்று முதல் அமல்: எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிப்பு?

Web Editor