மதுரை மாவட்டம் கோபாலபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தே.கல்லுப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் மாலைக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
சங்கக் காலத்தில் போர், பூசல் காரணமாக இறந்த வீரர்களுடன் உடன்கட்டை ஏறி இறந்த மனைவிக்கு அமைக்கப்பட்ட சதிக்கற்களை மாலைக்கோவில்களாக தென் மாவட்ட மக்கள் வணங்கி வருவதாக முனைவர் முனீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், கோபாலபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ளது என்றும், இதில் ஆண் மற்றும் பெண்ணின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வேளாம்பூர், மதவநாயக்கனூர், திருஉண்ணாட்டூர் ஆகிய ஊர்கள் அழிந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.